அடுத்த 5 படங்கள் – விஜய்ஆண்டனி அதிரடி முடிவு
விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் கொலைகாரன் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து தமிழரசன் உள்ளிட்ட ஓரிரு படங்கள் நடிக்கிறார்.
அவற்றின் படப்பிடிப்புகள் நிறைவடையவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில் கொலைகாரன் படத்தைத் தயாரித்திருக்கும் பிரதீப் மற்றும் அப்படத்தை வெளியிடும் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து விஜய்ஆண்டனியோடு தொடர்ந்து சில படங்கள் பணியாற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து விஜய்ஆண்டனியை வைத்து ஐந்து படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இந்த இருவரின் கோரிக்கையை விஜய்ஆண்டனியும் ஏற்றுக்கொண்டாராம்.
அதனால் இனி அடுத்த ஐந்து படங்கள் இங்கேதான்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.











