சினிமா செய்திகள்

இந்தியாவில் முதலிடம் பிடித்த சீமராஜா – படக்குழு உற்சாகம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.

நகைச்சுவை, காதல் ஆகியவற்றுடன் கூடுதலாக அரசர் காலத்துக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.

சூரி,சமந்தா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்தப்படம் 2019 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அளவிடும், Television Viewership Rating எனப்படும் TVR இல்சீமராஜாவுக்கு 22.32 பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 22.2 டிவிஆர் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற உயரத்தை சீமராஜா பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் பெரியவர்கள் என குடும்ப ரசிகர்கள் அதிகம் என சொல்லப்படுவதுண்டு. அது இந்தப்படத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

இதையொட்டி படத்தைத் தயாரித்துள்ள 24 ஏஎம் ஸடுடியோஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸிலும், @SunTV டிஆர்பி ரேட்டிங்கிலும் மாபெரும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு கோடான கோடி நன்றி????
Chennai trp – 22.2 ??
Tamilnadu trp- 21.52 ??

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு சிவகார்ததியன் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Related Posts