சினிமா செய்திகள்

விஜய் சிம்பு கோரிக்கை ஏற்பு – திரையுலகினர் கொண்டாட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர், மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது இரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

திரையுலகினர் அனைவரும் இவ்வறிப்பை வரவேற்கின்றனர்.

Related Posts