சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவனுடன் ஜோடியாக போட்டோ போடுவது ஏன்? – நயன்தாரா விளக்கம்

2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற பின் அவர் பேசியதாவது….

இரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோ‌ஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோ‌ஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோ‌ஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.

உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை, துணையாகப் போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம்.

புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. இரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும்.

நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.
வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது.

சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களைக் காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்குக் கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts