சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் படம் முடக்கம் – அதர்வா அதிர்ச்சி

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் 100. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின் மே 9-ம் தேதி (வியாழக்கிழமை) படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி இன்று படம் வெளியாகவில்லை.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகப் படத்தை வெளியிட முடியவில்லை என்கிறார்கள்.

இந்தப்படத்தில் அதர்வாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம். அந்த வேடத்தில் அவர் நன்றாக நடித்திருப்பதாகப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் படம் வெளியாகவில்லை என்கிற தகவல் அவருக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.

கடைசி நேரத்தில் இப்படிப் படத்தை முடக்கும் நிகழ்வுகள் எப்போதுதான் முற்றுப்பெறுமோ?

Related Posts