சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படம் குறித்து ஒரே நாளில் பல அறிவிப்புகள் ஏன்?

மிஸ்டர் லோக்கல்,பெயரிடப்படாத ரவிகுமார் படம், ஹீரோ, ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது.

அதன்பின்பு மே 6 ஆம் தேதியன்று, நாயகியாக அனுஇமானுவேல், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான் என்பதை அறிவித்தார்கள்.

அதன்பின் நேற்று (மே 7) யோகிபாபு, சூரி, நட்டி (எ)நட்ராஜன், ஆர்.கே.சுரேஷ்,பாரதிராஜா, சமுத்திரக்கனி,ஒளிப்பதிவு நீரவ்ஷா, படத்தொகுப்பு ரூபன், கலை வீரசமர்

ஆகிய அறிவிப்புகள் வெளியாகின.

ஒரேநாளில் இத்தனை அறிவிப்புகள் வெளியானது ஏன்?

ஏனென்றால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

அதனால்தான் நேற்று ஒரேநாளில் எல்லா அறிவிப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டிருக்கிறார்கள்.

Related Posts