சினிமா செய்திகள்

பூசையுடன் தொடங்கியது விஜய் 63

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் இன்று தொடங்கியது.

படத்தின் பூசையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம் உருவாவதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Related Posts