4 மாதங்களுக்குள் அடுத்த படம் வெளியீடு எப்படி? – அஜீத் பட ஆச்சரியம்
அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள்.
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சனவரி 10 அன்று அஜீத் நடித்த விஸ்வாசம் வெளியானது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் அடுத்த படம் வெளியாகிறது. இது எப்படி? என்று எல்லோரும் ஆச்சரியப்படலாம்.
இந்தப்படத்தில் அஜீத் மொத்தம் 14 நாட்கள் மட்டுமே நடிக்கவிருக்கிறாராம். அவ்வளவுதான் அவருடைய வேடம் என்று சொல்கிறார்கள்.
அஜீத்துக்காக இந்த வேடத்தைக் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்று ஆலோசனை நடந்ததாம். அப்படிச் செய்தால் சரியாக வராது என்பதால் அப்படியே வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அதனால் மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி என்கிறார்கள்.











