சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜின் அதிரடி முடிவு – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

சத்யராஜ் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

படம் மற்றும் அதில் நடிக்க வேண்டிய நாட்கள் ஆகியனவற்றைக் கணக்கிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம்.

இப்போது அதிரடியாகத் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

பெரிய கதாநாயகர்கள் பெரிய இயக்குநர்கள் படங்கள் ஆகியனவற்றைத் தவிர புதிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் என்றால் ஒன்றரைக்கோடி சம்பளம் என்று சொல்கிறாராம்.

சத்யராஜ் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த போது அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனபோது தன்னுடைய சம்பளத்தைக் குறைத்தார். அதனால் அவருக்கு நிறையப்படங்கள் கிடைத்தன.

இப்போது அவரைத்தேடி நிறையப்படங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் பட வாய்ப்புகள் குறைகின்றனவாம்.

Related Posts