ஆர்.ஜே.பாலாஜியின் இந்தி பற்றிய கருத்தும் விமர்சனமும்
மோடி அரசு இரண்டாம் முறை பதவியேற்ற வுடன் தமிழகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடங்கும் என்கிற விமர்சனங்களை மெய்ப்பிக்கும் விதமாக, புதிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்கியிருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தமிழக மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பையே எதிர்க்கிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். அதோடு, அவர் கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியான எல்.கே.ஜி படத்தில் இடம்பெறாத காட்சியொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒருவர் இவரிடம் இந்தியில் கேள்வி கேட்க அதற்கு ஆங்கிலத்தில் அவருக்குப் பதிலடி கொடுத்துவிட்டு, இதையே நான் தமிழில் சொல்லியிருந்தா உனக்குப் புரிந்திருக்குமா? என்கிற கேள்வியை. எழுப்பியிருக்கிறார்.
அவருடைய இந்தக் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.











