சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தனுஷ் பட பாடலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பும்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம். மரியான்.

2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

அவருடைய இசையில் கபிலன் எழுதிய , இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் இடம்பெற்றது. பெரும் வெற்றி பெற்றது அந்தப்பாடல்.

அந்தப்பாடலை பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்தீப் ஜோகி, தமிழில் பாடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

பஞ்சாபில் பரவுகிறது தமிழ் என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

அதற்கு தமிழ் இயல்பாக இந்தியா முழுக்க பரவுகிறது ஆனால் இந்தியை வலுக்கட்டாயமாக நம் மேல் திணிக்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts