சினிமா செய்திகள்

மஹா படத்தில் சிம்பு நாற்பது நிமிடங்கள் வருகிறார் – தம்பிராமையா தகவல்

சிம்பு,ஹன்சிகா, ஶ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மஹா.யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார்.

ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று (ஜூலை 12) நடந்தது.

இந்தப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகர் தம்பிராமையா பேசும்போது,

ஹன்சிகா அழகாக பப்ளியாக இருக்கிறார். இளைஞர்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அதேசமயம் அவர் சிறந்த நடிகை என்பதை இந்தப்படத்தில் நடிக்கும்போது உணர்ந்துகொண்டேன். அவரோடு சேர்ந்து நடிக்கும்போது அருகிருந்து அவர் நடிப்புத்திறமையைப் பார்த்து வியந்தேன்.

அதேபோல இந்தப்படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்கிறார்ரகள். அவர் நாற்பது நிமிடங்கள் இந்தப்படத்தில் வருகிறார். தம்பி சூர்யா மூன்று நிமிடங்கள் வந்த விக்ரம் படம் பெரிய வெற்றி எனும்போது சிம்பு நாற்பது நிமிடங்கள் வருகிறார் என்றால் இப்படம் மிகப்பெரிய வெற்றி என்பதற்கு எடுத்துக்காட்டு என்றார்.

Related Posts