சினிமா செய்திகள்

சந்தானத்தின் குலுகுலு படத்தை வெளியிடும் உதயநிதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குலு குலு. மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஏப்ரல் 19,2022 அன்று குலுகுலு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இப்போது படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.

இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்கு வெளீயீட்டிற்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.

ஜூலை 29-ஆம் தேதி வெளியாக உள்ளது’குலுகுலு’.இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்த அறிவிப்பை அந்நிறுவனம் ஜூலை 12 இரவு ஒன்பது மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts