சினிமா செய்திகள்

வணங்கான் படப்பிடிப்பைத் தள்ளிபோட்ட சூர்யா

சூர்யா,தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுகநாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படம் வணங்கான். இயக்குநர் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.

இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.

இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.

இந்நிலையில், அப்படம் நின்றுவிட்டது இனி அவ்வளவுதான் என்று வந்த பொய்ச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறேன் என்று சூர்யா அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஜூலை 20 ஆம் தேதி அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

ஜூலை 11 இயக்குநர் பாலா பிறந்தநாளையொட்டி படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் சூர்யா அறிவித்தார்.

இதனால் திட்டமிட்டபடி ஜூலை 20 இல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல்வாரத்திற்குத் தள்ளிவைக்கும்படி சூர்யா சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

திடீரென பதினைந்துநாட்கள் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டதால் படக்குழுவினர் குழப்பமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts