அஜீத் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக்கொண்ட சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன் மார்ச் 16 இரவு 10 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில்,
40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்
இவ்வாறு சுசீந்திரன் ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு, அரசியல் வேண்டாம் அஜீத்தே போதும் என்று சிலர் சொல்லியிருந்தாலும் பலர் கடுமையாகத் திட்டி வருகிறார்கள்.
அஜீத்திடம் கால்ஷீட் வாங்குவதற்காக அவர் செய்யும் தந்திரம் என்றும், போதை அதிகமானா பேசாம போய்த் தூங்கு என்பது உள்ளிட்டு பல்வேறு சொற்களில் திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சுசீந்திரனை மட்டுமின்றி அஜீத்தையும் திட்டுகிறார்கள். அஜீத் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கே வரமாட்டார் மக்கள் பணிக்கு வருவாரா? என்பது உட்பட எழுத முடியாத சொற்களில் விமர்சிக்கிறார்கள்.











