சினிமா செய்திகள்

இந்திய சினிமாவில் முதன்முறையாக – சூர்யாவின் காப்பான் பட ஆச்சரியம்

நடிகர் சூர்யாவின் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இப்படத்துக்காக இதுவரை இந்திய திரைப்படங்களில் வராத மாதிரி ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சியை அமைக்கத் திட்டமிட்டாராம் கே.வி.ஆனந்த்.

ஓடும்தொடர்வண்டியில் வைத்து அந்தச் சண்டை நடப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

இதற்காக இந்தியாவெங்கும் இடம் தேடி கடைசியில் ஒரிசாவில் பயன்படுத்தப்படாத நீண்ட தொடர்வண்டிப்பாதையைக் கண்டடைந்திருக்கிறார்கள்.

இரண்டு தொடர்வண்டிகளை வாடகைக்கு எடுத்து அதில் சூர்யா எதிரிகளுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம்.

மார்ச் 10 முதல் தொடங்கிய அதன் படப்பிடிப்பு இன்னும் தொடர்கிறதாம்.

இந்தச் சண்டைக்காட்சி சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் பிரமிக்க வைப்பது நிச்சயம் என்கிறார்கள்.

Related Posts