விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் – விமர்சனம்

சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போய்விட்டதால், முரட்டுத்தனமாக வளர்ந்து நிற்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண்.

அவருக்கு கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத் மீது முதலில் மோதல் பிறகு காதல்..

அம்மாவைப் போல அன்பான காதலியும் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்கிற பயத்துடனும் பதட்டத்துடனும் நாயகன் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள். அவற்றால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

முரட்டுத்தனமான வேடம் என்பதற்கு நியாயம் செய்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். அவருடைய பாத்திரப்படைப்பில் குழப்பம் இருக்கிறது.

நாயகி ஷில்பா கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறார். ஹரீஷுடனான காதல் அதன்பின் வருகிற சிக்கல் ஆகிய நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

மாகாபா ஆனந்தும், பால சரவணனும் நகைச்சுவைக்காகவும் கதையை நகர்த்திச் செல்லவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வருகிற காட்சிகளும் வசனங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் வந்து போன காட்சிகள்.

பொன்வண்ணன், சுரேஷ் போன்ற மூத்த நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

கவின்ராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

சாம் சி.எஸ். இசையில் சஞ்சாலி பாடல் கவனிக்க வைக்கிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, காதல் அதனால் வரும் சிக்கல்கள் ஆகியனவற்றை உளவியல் ரீதியாக அணுக முயன்றிருக்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.

அவர் நடித்திருக்கும் ஒரு காட்சியில் அவர் செய்யும் செயல் பொருத்தமில்லாமல் இருக்கிறது. காதலர்களைக் குழப்புவதோடு படத்தின் கதையையும் குழப்பியிருக்கிறார்.

Related Posts