October 18, 2026
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி யோகிபாபு நடித்த வெள்ளை யானை – தீபாவளி வெளீயீடு

மார்ச் மாதக் கடைசியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதனால்,நவம்பர் 14 அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சில் புதிய திரைப்படங்கள் வெளியாகவிருக்க்கின்றன என்று சொல்கிறார்கள்.

ஜீவா அருள்நிதி ஆகியோர் நடித்திருக்கும் களத்தில் சந்திப்போம்,சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் மற்றும் ஆபாச இயக்குநரின் இரண்டாம் குத்து ஆகிய படங்கள் தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றோடு இப்போது நான்காவதாக இன்னொரு படமும் சேர்ந்திருக்கிறது.

அந்தப்படம், சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகிபாபு,ஆத்மியா நடிப்பில் உருவாகியிருக்கும் “வெள்ளையானை”.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருக்கிறார்.மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கிறார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் ஈ.ராமதாஸ்,
இயக்குநர் மூர்த்தி,இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி,பவா செல்லதுரை,’சாலை ஓரம் ‘ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இப்படமும் தீபாவளியையொட்டி வெளியாகவிருக்கிறது.

இதுவரை நான்கு படங்கள் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகின்றன என்பது போகப்போகத் தெரியும்.

Related Posts