செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தகுதியின்றி போட்டியிடும் மூவர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இத்தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், இராமநாராயணன் மகன் முரளி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இவை தவிர தேனப்பன், சிங்காரவேலன், ஜேஎஸ்கே ஆகிய தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிங்காரவேலன், தேர்தல் அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்……

24.10.2020
சென்னை
அனுப்புநர்
R.சிங்காரவடிவேலன்,
உறுப்பினர் எண் : 1824,
M/s.மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்,
பிளாட் நம்பர் : A8,
ஸ்ரீனிவாசா அடுக்ககம்,
அருணாச்சலம் ரோடு, சாலிகிராமம்,
சென்னை – 600 093.
தொலைபேசி எண்: 8754756001 / 9940389335.

பெறுநர்

நீதியரசர் உயர்திரு.ஜெயச்சந்திரன் அவர்கள்,
தேர்தல் நடத்தும் அதிகாரி,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
அண்ணா சாலை,
சென்னை.

ஐயா,

பொருள் : திரு.ராதா கிருஷ்ணன், திரு.கதிரேசன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோரை தகுதி நீக்கம் செய்வது குறித்து.

வணக்கம். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 ஆம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 க்கு உட்பட்டது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது. அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15.10.2020 அன்றும் வெளியிட்டீர்கள்.

15-102020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில், விதி எண் 2ல் ” சங்க விதிமுறை எண் 13 ன் படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்படம் தயாரித்து, வெளியிட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு ” என குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.

இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின் படி, 14-10-2020க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை 14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.

எனவே ஐயா அவர்கள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் விதிகளின் படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு சிங்காரவேலன் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரி என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

Related Posts