புதிய பட வேலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்னாச்சு?
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது.
அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது.
ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பெரும் கூட்டம், நிறைய குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றை வைத்துப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதால் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான திட்டமிடல் மீண்டும் தாமதமாகிறதாம்.
இதனால் விக்ரம், கார்த்தி, விக்ரம்பிரபு உள்ளிட்ட நடிகர்கள் வேறு படங்களில் நடிக்க முன்வந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சோதனைகள் போதாதென, தயாரிப்பு நிறுவனத்துக்கும் மணிரத்னத்துக்கும் இடையே படத்தின் செலவு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மணிரத்னம் இன்னொரு திரைப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
அப்படின்னா பொன்னியின் செல்வன் அவ்வளவுதானா? என்றால், அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இப்போது அவர் வெறொரு திரைக்கதை வேலைகளில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் தொடங்கினால் வேறு இயக்குநரை வைத்து அந்தக் கதையைப் படமாக்கலாம் என்று சொல்கிறார்கள்.











