என்னைப் பற்றி பொய்யை ஏன் பரப்புகிறீர்கள்? கஸ்தூரி ஆவேசம்
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிலிருந்து, ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்.
அதே வேளையில், WILD CARD சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளது யார் என்பது குறித்துச் சமூகவலைத்தளத்தில் பலரும் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் சிலர் WILD CARD சுற்றின் மூலம் கஸ்தூரி தான் செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இது குறித்துக் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். அதற்குள் நம் ஊரில் என்னை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைஞ்சு காரசாரமாக விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞரை கடைசி முறைகூடப் பார்க்க முடியவில்லை. புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்றெல்லாம் சொன்னேன். அதை யாருமே கவனிக்கவில்லை. இந்தப் பொய்யை மட்டும் ரொம்ப ஜரூராக பரப்புகிறீர்கள். நிறையப் பேருக்கு உண்மையை விட சுவாரசியம் தான் முக்கியமாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நான் நுழையவில்லை
இவ்வாறு கஸ்தூரி தெரிவித்திருக்கிறார்.
கஸ்தூரி சமூகவலைதளங்களில் வருகிற விசயங்களுக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறார்? என்கிற கேள்வியும் வந்து கொண்டிருக்கிறது.












