September 16, 2026
சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் கருத்து வேறுபாடா? புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய விக்னேஷ்சிவன்

விக்னேஷ்சிவன் நயன்தாரா ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதில் நெற்றிக்கண் படத்தைத் தயாரித்திருந்தார்கள்.

மேலும் ராக்கி, கூழாங்கல் போன்ற படங்களை அந்நிறுவனத்தின் பெயரில் வாங்கி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை முதல்பிரதி அடிப்படையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவைதவிர, மேலும் சில சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறாராம் விக்னேஷ்சிவன். விக்கி ப்ளிக்ஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அப்புதிய நிறுவனத்தில் விக்னேஷ்சிவன் மற்றும் அவர் தங்கை ஆகியோர் பங்குதாரர்கள் என்று சொல்லப்படுகிறது.

நயன்தாராவுடன் இணைந்து தொடங்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இருக்கும்போதே தங்கையைப் பங்குதாரராக்ச் சேர்த்துக் கொண்டு புதிய நிறுவனமொன்றை விக்னேஷ்சிவன் தொடங்கியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts