September 16, 2026
சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸில் வெளியேற்றப்பட்ட நடிகர் செய்த அதிரடி

விஜயசேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்,` ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ள… ‘ என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல்.

இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் சிக்கி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல் கதையைப் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று, டேனி இன்ஸ்டாகிராம் பதிவில், தான் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அவரின் பதிவில், ‘உங்கள் அனைவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இதுதான் என் அழகு தேவதை. என் மனைவி. நாங்கள் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். குடும்பச் சிக்கலால் இத்தனை நாள் எங்களின் காதல்குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன். இன்று முதல் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக எங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம். உங்களில் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு வேண்டும். இனி, நான் பேச்சிலர் கிடையாது’ என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவர் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு பெரிய அடையாளம் கிடைத்திருக்காது. பிக்பாஸில் கலந்து கொண்டான் பலனை அவர் அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

Related Posts