ரஜினியின் 2 ஓ படத்தின் தணிக்கைச் சான்று படத்தின் நீளம் இதுதான்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ.
இப்படத்தின். புதிய முன்னோட்டம் நவம்பர் 3,2018 அன்று வெளியிடப்பட்டது.
வெகுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
படம் இரண்டு மணி நேரம் இருபத்துநான்கு நிமிடங்கள் இருக்கிறதாம்.
தணிக்கைக்குழுவில் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எவ்வித ஐயமும் இன்றி நவம்பர் 29 வெளியீட்டுக்கு படம் தயாராகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிடலாம்.










