சர்கார் – முதல் ஆறுநாள் வசூல் விவரம்
நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம்.
இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது.
மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம்.
நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம் நாளான சனிக்கிழமை பத்து கோடி வசூலாகியிருக்கிறது.
ஆறாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுமார் பனிரெண்டு கோடி வசூலானதாம்.
கடந்த ஆறு நாட்களில் சுமார் தொண்ணூற்று ஐந்து கோடி வசூலித்திருக்கிறது.
இதில் சுமார் அறுபது விழுக்காடு தயாரிப்பாளருக்குப் போய்ச்சேரும் என்கிறார்கள்.
இந்தவாரம் முழுக்க சுமாராகக் கூட்டம் வந்தாலே போட்ட தொகையை எடுத்துவிடலாம் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.











