சூர்யா 39 பட இயக்குநர் படத்தின் பெயர் ரிலீஸ்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம்.
அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் சூர்யா 40 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.
38 ஆவது படம் வெளியீட்டுக்குத் தயார், 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
39 என்ன ஆச்சு? என்கிற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
இன்று (மார்ச் 1,2020)மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.











