வலிமையுடன் மோதும் அருவா – அஜீத் சூர்யா ரசிகர்கள் பரபரப்பு
இன்று (மார்ச் 1,2020)மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு இசை டி.இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.ஒரே மூச்சில் வேகமாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் வலிமை படமும் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று சூர்யாவின் அருவா படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இவ்வாண்டு தீபாவளி நாளில் அஜீத் சூர்யா படங்கள் மோதுவது உறுதியாகிவிட்டது.
இதனால் அஜீத் சூர்யா ஆகியோரின் ரசிகர்களிடையே போட்டி ஆரம்பமாகிவிட்டது. இதனால் இணையவெளி பரபரப்பாகியுள்ளது.











