தயாரிப்பாளர் ஆகிறார் ஸ்ருதிஹாசன்
ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.1978 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் படத்தைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி.
இப்போது, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
கமல்,ரஜினி ஆகியோர் வேடங்களில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்துக்கு இசையமைக்க இளைடராஜாவை அணுகியிருக்கிறார்களாம். அவரும் ஒப்புக்கொள்வார் என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்று சொல்கிறார்கள். இதனால் நடிகை ஸ்ருதிஹாசன், நானே இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன் என்று முன்வந்திருக்கிறாராம்.
ஸ்ருதிஹாசன், முதன்முறையாக ஒரு முழுநீளப்படத்தைத் தயாரிக்கிறார் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.











