September 12, 2026
சினிமா செய்திகள்

சர்கார் கொண்டாட்டம் – அடுத்த சர்ச்சையை ஏற்படுத்திய வரலட்சுமி

சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்ததால்,இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் வைக்கப்படுகிறது. பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது என்று அறிவித்தார்கள்.

அதன்பின் எல்லாம் சுபம் என்று அனைவரும் சொல்லிவிட அமைதி ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு சர்கார் படக்குழுவினர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

அப்போது வெட்டப்பட்ட கேக்கில் சிறிய வடிவில் மிக்ஸி மற்றும் கிரைண்டர் உருவங்களை வைத்திருந்தனர்.

படத்தில் நீக்கினாலும் அது பற்றி நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம் என்பதைச் சொல்லியது அந்த புகைப்படம்.

இப்போது அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி.

அதோடு கோமளவல்லி என்கிற பெயரையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

படத்தில் அமைதியாக்கப்பட்ட அந்தப் பெயரை இவர் பகிர்ந்து இருப்பது அதிமுகவினரை சீண்டும் விதமாக அமைந்துள்ளது என்கிற விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

Related Posts