சினிமா செய்திகள் நடிகை

ஓரங்கட்டிய நயன்தாரா – புழுங்கித் தவிக்கும் புதுஇயக்குநர்

புதிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தை உருவாக்க மிகக் கடுமையாகப் போராடி படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

படம் முழுமையாக முடிவடைந்த நிலையில், உள்ளே வந்த இயக்குநர் விக்னேஷ்சிவன், படத்துக்கான விளம்பரப்பாடலைப் படமாக்கியதோடு, படத்திலும் சில மாற்றங்களைச் சொல்லியிருக்கிறாராம்.

படத்தின் நாயகி நயன்தாராவும் விக்னேஷ்சிவனுக்கு ஆதரவாகவே இருக்கிறாராம்.

இதனால் முதல்படம் வெளியாகிறது என்கிற மகிழ்ச்சியைக் காட்டிலும் படம் வெளிவருவதற்கு முன்பே நம்மை ஓரங்கட்டுகிறார்களே என்று இயக்குநர் நெல்சன் புழுங்கித் தவிப்பதாகச் சொல்லப்படுகிறது.

நடப்பவற்றை வெளிப்படையாக அவரால் சொல்ல முடியாது என்பதும் படம் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டால் இது எல்லாம் மாறிப்போகும் என்பதும்தான் எதார்த்தம்.

Related Posts