சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்தைத் தடை செய்ய வேண்டும் – கிளம்பியது சர்ச்சை

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ஏகாதசி எழுதிய ஒரு பாடல் அண்மையில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அப்பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மண்ணு உருண்ட மேல மண்ணுருண்ட மேல
மனுச பைய ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு

ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டம்

மண்ணுருண்ட மேல இங்க
மனுச பைய ஆட்டம் பாரு

கண்ணு ரெண்ட மூடி புட்டா
வீதியில போகும் தேரு

அண்டாவுல கொண்டு வந்து
சாராயத்த ஊத்து

அய்யாவோட ஊர்வலத்தில்
ஆடுங்கடா கூத்து

ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு

கடைசியில மனுசனுக்கு
ஊதுவங்க சங்கு

ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு

கடைசியில மனுசனுக்கு
ஊதுவங்க சங்கு

நெத்திக் காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்து

ஏய் ஒத்த ரூபா ஒத்த ரூவா
ஒத்த ரூவா ஒத்த ரூவா

ஒத்த ஒத்த ஒத்த
ஒத்த ஒத்த ஒத்த
ஒத்த ஒத்த ஒத்த

நெத்திக் காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து தானே

செத்தா வரும் சேந்து ஆட
வாங்கிப் போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே

குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா

அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடி தான் மெய்யடா

ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா

அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடி தான் மெய்யடா

கீழ் சாதி உடம்புக்குள்ள
கீழ் சாதி உடம்புக்குள்ள

ஓடுறது சாக்கடையா
ஐயா ஓடுறது சாக்கடையா

அந்த மேல் சாதி காரனுக்கு
அந்த மேல் சாதி காரனுக்கு

ரெண்டு கொம்பு இருந்தா
கொம்பு இருந்தா

கொம்பு இருந்தா கொம்பு இருந்தா

கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு

கீழ் சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா

மேல் சாதி காரனுக்கு
கொம்பு இருந்தா காட்டுங்கய்யா

உழைக்குற கூட்டமெல்லாம்
கீழ் சாதி மனுசங்கெல்லாம்

உக்காந்து திங்குறவங்க எல்லாம்
மேல் சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு

ஹேஎன்னங்கடா நாடு

அட சாதிய பொதச்சு மூடு

என்னங்கடா நாடு

அட சாதிய தூக்கி போடு

ஹே என்னங்கடா நாடு
அட சாதிய பொதச்சு மூடு

இந்தப்பாடல் வரிகள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்தப்பாடல் வரிகளைப் பகிர்ந்து சாதி மோதலைத் தூண்டும் பாடல் வரிகள் இடம்பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்திலிருந்து நம் சாதிக்காரர்கள் வெளியேறுங்கள். இனியும் இதுபோல கூத்தாடிகளுக்குக் கொடி பிடிப்பதை நிறுத்துங்கள் என்று சிலர் எதிர்ப்பாகப் பேசி வருகின்றனர்.

அதேநேரம், கண்ணாமூச்சி என்கிற இணையதள தொடர் அறிமுக விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், சூரரைப் போற்று படத்தில் வந்திருக்கும் பாடலை அனைவரும் கேளுங்கள். அப்பாடலை மிகப்பெரிய வெற்றியடைய வையுங்கள் என்று ஆதரவாகப் பேசினார்.

Related Posts