சினிமா செய்திகள்

காப்பான் பாடல் விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்கள்தாம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா,ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான்.

இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம்.

கடற்கரையோரம் உள்ள சென்னையின் மிகப்பெரிய அரங்கமொன்றில் இவ்விழா நடைபெறவிருக்கிறது என்கிறார்கள்.

அந்த விழாவில் சூர்யா, மோகன்லால், ஆர்யா,சாயிஷா உட்பட படத்தில் நடித்தவர்கள், இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இலண்டனிலிருந்து கிளம்பி வருகிறாராம். அவர் மட்டுமின்றி விழாவின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்.

இதனால் காப்பான் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமாக இருக்கின்றனராம்.

இவ்விழா பற்றிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Related Posts