February 12, 2025
சினிமா செய்திகள்

வெங்கல்ராவுக்கு முதல் ஆளாக உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.பிறகு நடிகரானார்.பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அவரைத் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.அதற்குக் காரணம், 2022 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டதுதான்.

இதற்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் காணொலி ஒன்றில் உருக்கமாக திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

venkalrao

venkalrao

அதில், எனக்கு கை, கால் விழுந்துவிட்டது. நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லப் பணம் இல்லை. நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவருடைய இந்த வேண்டுகோள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் முதல் ஆளாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி செய்திருக்கிறார். அவர் வெங்கல்ராவுராக்கு முதல்கட்டமாக இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.அவரைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இரண்டு இலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

இவர்களைப் போல் மேலும் பலர் அந்நடிகருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

Related Posts