சினிமா செய்திகள்

நடிகர் விஷால் நடிகை அனிஷா திருமண நிச்சயம்

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனைத் தெரிவித்து இருந்தார்.

பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

அனிஷா ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் தொடர்பாக விஷால் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் 16.03.2019 அன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts