சூர்யாவுக்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு

கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை துணை குடியரசுத் தலைவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “
இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் “ சின்னபாபு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு படத்தை பற்றிக்கூறியது இதோ
சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.
இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார். அதுவும் தமிழிலேயே ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.