சினிமா செய்திகள் நடிகர்

பிரபுதேவாவுடன் இணைகிறார் தனுஷ்

மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

மாரி 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

பாடல்காட்சிகள், மற்றும் சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க பிரபுதேவாவைக் கேட்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக யாருக்கும் நடனம் அமைக்க ஒப்புக்கொள்ளாத பிரபுதேவா, தனுஷ் படம் என்றதும் ஒப்புக்கொண்டாராம்.

விரைவில் அந்தப் பாடல் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். பிரபுதேவா நடனம் அமைக்க தனுஷூம் சாய்பல்லவியும் ஆடவிருக்கிறார்கள்.

Related Posts