February 12, 2025
சினிமா செய்திகள்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது.

இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர் மட்டும் செர்பியா சென்று வெளிப்புறக்காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நடிப்பதாக இருந்த துல்கர்சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.இருவரிடமும் வாங்கிய தேதிகளைப் பயன்படுத்தாமல் மறுபடி மறுபடி மாற்றி மாற்றித் தேதிகள் கேட்டிருக்கிறார்கள்.அவ்வாறு கேட்ட தேதிகளில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பட வேலைகள் இருப்பதால் தேதி தர முடியவில்லை என்பதால் இருவரும் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இருவருமே தேதிகள் ஒத்துவரவில்லை என்று சொன்னதில் முழு உண்மையில்லையாம்.

துல்கர்சல்மான் நடிக்க ஒப்புக்கொண்ட பின், அவரை வைத்து புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்பதற்காக மனிரத்னம் அலுவலகத்திலிருந்து அழைத்திருக்கிறார்கள்.ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்திருக்கிறார்கள். இரண்டுமுறையும் வேறு படப்பிடிப்பு இருக்கிறதென்று சொல்லி துல்கர்சல்மான் வரவில்லையாம்.

மூன்றாவதுமுறை அழைத்தபோது வந்திருக்கிறார்.அலுவலகம் வந்த துல்கரை தரைத்தளத்தில் அமர வைத்திருக்கிறார்கள்.ஒரு சில மணி நேரங்கள் அவர் காத்திருந்தாராம். அவரை மணிரத்னம் வந்து பார்க்கவில்லையாம்.மணிரத்னத்தைப் பார்க்கவும் துல்கரை கூட்டிப்போகவில்லையாம்.

இதனால் கடுப்பான துல்கர், யாரிடமும் சொல்லாமல் எழுந்துபோய்விட்டாராம்.

அதன்பின் மணிரத்னம் அலுவலகத்திலிருந்து பலமுறை பேசியும் அவர் தொடர்பிலேயே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் மீண்டும் சிம்புவிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

சிம்பு வந்ததால் ஜெயம்ரவியும் வெளியேறிவிட்டார்.

அவருக்குப் பதிலாக நிவின்பாலி மற்றும் அருண்விஜய் ஆகியோரிடம் பேசிப்பார்த்தார்கள் என்றும் அவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதன்பின்,மலையாள நடிகர் டொவினோதாமஸ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோரிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.இருவரில் யாருடைய தேதிகள் ஒத்துவருகின்றதோ அவரை நடிக்க வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

துல்கர்சல்மான் கோபப்பட்டு வெளியேறிதால் அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக மலையாளத்திலிருந்தே ஒருவரை நடிக்கவைக்கப் போராடுகிறார் மணிரத்னம் என்கிறார்கள். அதனால்தான் முதலில் நிவின்பாலியைக் கேட்டார்கள்,அவர் இல்லையென்றதும் இப்போது டொவினோதாமஸிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts