பணியாற்றியவர்களுக்கு ஊதியமில்லை – ருத்ரன் பட சர்ச்சை
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”.
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார்.
கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
“ருத்ரன்” படப்பிடிப்பு 2021 சனவரி 21 அன்று தொடங்கியது.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் ஒரு பாடல் ஆகியன வெளியாகியிருக்கின்றன.அவை வெளியாகி சுமார் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.
இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. வெளியாகவில்லை. அதன்பின் இந்த மாதம் வெளியாகும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.
அடுத்து ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்தத் தேதியிலும் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஏன் இப்படி தள்ளிக்கொண்டே போகிறதென்றால்? தயாரிப்பாளர் தான் காரணமென்கிறார்கள்.
படத்தில் பணிபுரிந்த யாருக்குமே முறையாகச் சம்பளம் தரவில்லையாம். இதனால் தயாரிப்பு நிர்வாகிகள் மாறிக்கொண்டேயிருந்தனராம். ஒளிப்பதிவாளர் உட்பட சில முதன்மையான தொழில்நுட்பக்கலைஞர்கள் படத்திலிருந்து விலகிக் கொண்டார்களாம். இதனால் இறுதிக்கட்டப் பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதாம்.
எனவே படவெளியீடு தள்ளிக்பொண்டே போகிறது என்கிறார்கள்.