சினிமா செய்திகள் நடிகர்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தனுஷ் படம்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார்.

சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்கிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பில் சசிகுமார் கலந்துகொள்ளவிருக்கிறாராம். படத்தில் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடிக்கிறாராம்.

இந்த வேடத்தில் நடிப்பதற்காக சசிகுமாரை இதுவரை நாம் பார்த்திராத வகையில் மிகவும் ஸ்டைலாக மாற்றியிருக்கிறாராம் கெளதம் மேனன். அவருடைய தோற்றமே பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் விரைவில் படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.

Related Posts