தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
விண்ணைத் தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கொடி உட்பட பல படங்களைத் தயாரித்திருப்பவர் மதன். இப்போது கவுதம்மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கவுதம்மேனனும் இவரும் திரைத்துறைக்கு வருமுன்பே நண்பர்கள். திரைத்துறைக்கு வந்த பின்பும் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.













