சினிமா செய்திகள்

நண்பருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம்மேனன்

விண்ணைத் தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கொடி உட்பட பல படங்களைத் தயாரித்திருப்பவர் மதன்.

இப்போது கவுதம்மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் கவுதம்மேனனும் இவரும் திரைத்துறைக்கு வருமுன்பே நண்பர்கள்.

திரைத்துறைக்கு வந்த பின்பும் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

தயாரிப்பாளர் மதனுடைய பிறந்தநாள் மார்ச் 19.

பிறந்தநாளைப் பெரிதாகக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லாத மதன், அன்றும் வழக்கம் போலவே அவருடைய அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.

அப்போது அவரிடம் சொல்லாமலேயே அலுவலகத்துக்கு தன் நண்பர்கள் உதவி இயக்குநர்கள் குழுவுடன் வந்திருக்கிறார் இயக்குநர் கவுதம்மேனன்.

மதனின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் என்று சொல்லி கேக் வாங்கிவந்து மதனை வெட்டவைத்து, அவருக்கு கேக் ஊட்டி தன் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார் கவுதம் மேனன்.

எதிர்பாராமல் நடந்த இந்நிகழ்வால் திக்குமுக்காடிப் போனாராம் தயாரிப்பாளர் மதன்.

Related Posts