சினிமா செய்திகள்

கூட்டணியில் மாற்றம் செய்த பா.இரஞ்சித் – இதையும் செய்வாரா? இரசிகர்கள் எதிர்பார்ப்பு

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.

அந்தப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, ஆசை ஓர் புல்வெளி, நடுக்கடலுல கப்பல இறங்கி உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான்.

இப்படங்களிலும் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து வெற்றிக்கூட்டணியாக வலம்வந்து கொண்டிருந்தனர்.

இப்போது, அந்தக் கூட்டணியில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

பா.இரஞ்சித் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது.

நாடக நடிகையொருவரின் வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக தென்மா என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பா.இரஞ்சித்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்திருக்கும் தென்மா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இந்தப்படத்துக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து பா.இரஞ்சித் இவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

ஆனாலும், பா.இரஞ்சித்தின் இரசிகர்கள் பலருக்கும் அவர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. செய்வாரா பா.இரஞ்சித்?

Related Posts