சினிமா செய்திகள்

பாலா சூர்யா படத்தில் இணையும் இயக்குநர் விஜி

இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றிச் மாற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனங்களை எழுத பாலாவுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் விஜி.

அள்ளித்தந்த வானம், வெள்ளித்திரை ஆகிய படங்களை இயக்கியிருக்கும் விஜி, மொழி, 36 வயதினிலே ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிப் பெரும்புகழ் பெற்றவர்.

ஏற்கெனவே பாலா தயாரித்த படங்களில் விஜி பணிபுரிந்திருந்தாலும் பாலா இயக்கும் படத்துக்கு விஜி வசனம் எழுதுவது இதுவே முதல்முறை.

இதனால் இந்தப்படம் பெரிதும் பேசப்படுகிற வெற்றிப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.

சூர்யா இப்போது நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கின்றனர்.

Related Posts