சினிமா செய்திகள்

யோகிபாபுவை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி – தர்மபிரபு குழு உற்சாகம்

முத்துக்குமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு. இப்படத்தில் தற்கால அரசியலை நையாண்டி செய்திருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் போற்றும் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தப்படத்துக்கு எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை இரண்டாம் தரமாக கிண்டல் செய்து காட்சி வைத்துள்ள தர்ம பிரபு ..

அதே போல இந்த படத்தில் இந்து மத கடவுள்களை படு கேவலமாக சித்தரித்துள்ளனர்.மொட்ட ராஜேந்திரன் என்பவன் சிவனாக நடித்துள்ளான்.அருவருப்பான ஆட்டம் ஆடுகிறான் சிவன் வேடத்தில் .சிவனை கேவலமாக காமெடி செய்கிறான் யோகி பாபு..சிவனை இந்த அளவுக்கு இதுவரை யாரும் அசிங்கபடுத்தியதில்லை…

என்றெல்லாம் முகநூலில் பதிவிட்டிருந்தார் எஸ்.வி.சேகர். பின்பு அதை நீக்கிவிட்டார்.

இந்த எதிர்ப்புகளைத் தாண்டி அப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அணமையில் சன் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பானபோதும் பார்த்த அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில், தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் செல்லுமுன் தர்மபிரபு படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினி.

அதன்பின் யோகிபாபு ஜெய்ப்பூர் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்துப் பாராட்டினாராம் ரஜினி. அதோடு யோகிபாபுவுடன் இருந்த தர்மபிரபு படத்தின் இயக்குநர் முத்துக்குமரனிடம், ரொம்ப துணிச்சலா பொலிட்டிகல் சட்டய்ர் பண்ணியிருக்கீங்க என்று பாராட்டினாராம்.

இதனால் தர்மபிரபு படக்குழுவினர் உற்சாகமாக இருக்கிறார்கள்.

Related Posts