சினிமா செய்திகள்

ஜோதிகாவின் புதிய படம் – 20 ஆம் தேதி தொடங்குகிறது

ஜோதிகா இப்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் படம் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு படங்களிலும் ஜோதிகா நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம்.

இவற்றைத் தொடர்ந்து இம்மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறாராம் ஜோதிகா.

‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கிராமத்துப் பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

Related Posts