கவின் நடிக்கும் ஸ்டார் பட வெளியீடு எப்போது? – புதியதகவல்

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலாசுவே ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது.
இவ்விரு படங்களில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இதுவரை படத்தைத் தொகுத்துப் பார்த்ததை வைத்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் என்கிறார்கள்.அதற்கு கவினின் தேதிக்காகக் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஸ்டார் படத்தை பிப்ரவரி 14,2014 காதலர் தினத்தன்று வெளியிட்டுவிடவேண்டும் இயக்குநர் இளன் விரும்புகிறாராம்.அத்னால், அதற்கேற்பத் திட்டமிட்டு படத்தின் வேலைகளை வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்.
ஆனால், படத்தைத் தயாரித்திருக்கும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனமோ, நீங்கள் படத்தின் வேலைகளை முழுமையாக முடித்துக் கொடுங்கள். அதன்பின் படத்தை முறைப்படி விளம்பரப்படுத்தி சரியான நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள்.அது பிப்ரவரி 14 ஆகவும் இருக்கலாம், தள்ளியும் போகலாம் என்றும் சொல்லியிருக்கிறார்களாம்
இதனால் படப்பிடிப்புக்குப் பின்பான வேலைகளை இயக்குநர் வேகப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.படத்தொகுப்புப் பணிகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொருபக்கம் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தின் வேலைகளை வேகப்படுத்தி அந்தப்படத்தை கவினின் அடுத்த படமாக வெளியிட்டுவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
இவ்விரண்டு படங்களில் முதலில் எது வெளியாகவேண்டும் என்று கவின் விரும்புகிறாரோ அந்தப்படம்தான் முதலில் வெளியாகும் என்பதுதான் எதார்த்த நிலை.
கவினின் முடிவு என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.