சினிமா செய்திகள்

தனுஷ் நித்யாமேனன் மோதல் – இட்லிகடையில் சிக்கல்

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

இப்பட்த்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றும் மீதிப்படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

என்ன சிக்கல்?

இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன்.அவரிடம் இப்படத்தில் நடிப்பதற்கான தேதிகள் வாங்கி அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடத்தாமல் இரத்து செய்துவிட்டார்களாம்.தனுஷின் உடல்நிலை உட்பட பல காரணங்களால் படப்பிடிப்பு இரத்தானது என்று சொல்கிறார்கள்.அதோடு அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாட்களில், அவரை சும்மா உட்கார வைத்துவிட்டு வேறு காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தாராம் தனுஷ்.இதனால் அவர் மீது வருத்தத்தில் இருந்தாராம் நித்யாமேனன்.

இப்படியிருக்கும் நிலையில், மீண்டும் இட்லிகடை படத்துக்குத் தேதி கேட்டபோது நித்யாமேனன் தேதிகள் இல்லையாம்.தனுஷ் படக்குழு கேட்ட தேதிகளை பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்துக்குக் கொடுத்திருக்கிறார்.இதனால் அங்கிருந்து வர இயலாது என்று சொல்லிவிட்டாராம் நித்யாமேனன்.

நித்யாமேனன் இப்படிச் சொல்லிவிட்டதால், இயக்குநர் பாண்டிராஜ் படக்குழுவைத் தொடர்பு கொண்டு நித்யாமேனன் தேதிகளை விட்டுக் கொடுக்கச் சொல்லி கேட்டார்களாம்.

பாண்டிராஜும் தனது படப்பிடிப்பை நித்யாமேனன் தேதிகளுக்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ள முன்வந்தாராம்.ஆனால் நித்யாமேனன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

உங்களுக்குக் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பை நடத்துங்கள்,அதில் மாற்றம் செய்தால் மறுபடி என்னால் தேதி கொடுக்கவியலாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

பாண்டிராஜ் படத்தில் நடிக்க மார்ச் மாதம் மத்தி வரை தேதி கொடுத்திருக்கிறாராம் நித்யாமேனன்.அதை முழுமையாக முடித்துவிட்டு இட்லிகடைக்கு வருகிறார் என்று வைத்துக் கொண்டால் சொன்ன தேதியில் இட்லிகடை படத்தை வெளியிட இயலாது.

இதனால் நித்யாமேனனை சமாதானம் செய்து இட்லிகடை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சிகள் நடக்கின்றனவாம்.அவர் சமாதானம் ஆகி இட்லிகடை படப்பிடிப்பில் கலந்து கொண்டால்தான்,சொன்ன தேதியில் அப்படம் வெளியாகும். இல்லையென்றால் அந்தத் தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

என்ன நடக்கப்போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts