சினிமா செய்திகள்

வியாழக்கிழமை செண்டிமெண்டை மீறி விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியானது ஏன்?

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயந்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ’அஜித்-ன் ‘பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி படத்தின் முதல்பார்வை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திடீரென வெளியாகியுள்ளது.

மோஷன் போஸ்டரில், `தூக்குதொரண்ணா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி என்கிற அதிரடி வசனத்துடன் அஜித் தோன்றுகிறார்.

மோஷன் போஸ்டரில், விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

எவ்வித முன்னறிவிப்புமின்றி மோஷன் போஸ்டர் வெளியானாலும் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படங்களின் அறிவிப்பு, முதல்பார்வை உள்ளிட்ட எல்லா விசயங்களும் வியாழக்கிழமை நாளில்தான் வெளியாகிவந்தது.

முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை நாளில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

என்ன காரணம்?

இப்படம் 2019 பொங்கலன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ரஜினி நடிக்கும் பேட்ட படமும் பொங்கலன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

பேட்ட வெளியாவதால் இப்படம் தள்ளிப்போகிறது என்கிற செய்தி வேகமாகப் பரவியது.

அதை வளரவிடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக வியாழக்கிழமை செண்டிமெண்டையும் மீறி ஞாயிற்றுக்கிழமையன்று மோஷன் போஸ்டரை வெளியிட்டதாகச் சொல்கிறார்கள்.

Related Posts