பட்டாஸ் ரிலீஸ் தேதியில் மாற்றம்
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் பட்டாஸ்.
இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இப்படம் 2020 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி நடித்துள்ள தர்பார், சனவரி 9 ஆம் தேதி வெளியாவதால் இப்படத்தை சனவரி 16 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
இப்போது அதிலும் ஒரு மாற்றம் செய்திருக்கிறார்களாம்.
சனவரி 16 ஆம் தேதிக்குப் பதிலாக சனவரி 15 ஆம் தேதியே படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அதுகுறித்த அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறார்களாம்.
வியாழக்கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படத்தை வெளியிடக் காரணம் ஒரு நாள் முன்னதாகவே வசூலைப் பார்க்கலாம் என்பதுதானாம்.











