சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பு

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன்,சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்றும் அதுவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன. அறிவிப்பு வரவேண்டியதுதான் பாக்கி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போது அதில் அதிரடி மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல இப்படம் நெட்ப்ளிக்ஸில் வருவதற்கு முன்பே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்கிற அதிர வைக்கும் தகவலும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருந்தது. அதனால் நேரடியாக இணையத்தில் வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்படி ஓர் அதிரடி முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறதென்றும் அன்றே நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts